கொழும்பைக் குறிவைக்கும் தீவிரவாதக் கும்பல்! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கைத் தலைநகரின் சில பிரதேசங்களை இலக்கு வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் 7 இடங்களை இலக்கு வைத்து குறித்த தாக்குதல் நடாத்த திட்டமிட்டுள்ளமை குறித்து தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடாளுமன்றம், கொழும்பு துறைமுக நகரம், கங்காராமை உள்ளிட்ட 7 இடங்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் இலக்கு வைத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளினால் இது திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
பல்லேகல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், இந்த விடயம் தொடர்பில் அறிந்திருந்த நிலையில் அது தொடர்பிலான தகவல்களை கடிதமொன்றின் ஊடாக தென்னேகும்புர பொலிஸ் சோதனைச் சாவடிக்கு வீசியுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது.
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள், தொலைபேசியின் ஊடாக கொழும்பு நகரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் திட்டம் குறித்து கலந்துரையாடல்களை நடாத்தி விடயத்தை, குறித்த கைதி செவிமடுத்துள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.