காபூல் விமான நிலையத்தில் நிலவும் பதற்றம்: 5 பேர் பரிதாப உயிரிழப்பு!
காபுல் விமானநிலையத்தில் பெரும் குழப்பம் காணப்படுவதாகவும் ஆயிரக்கணக்கில் மக்கள் விமானங்களில் ஏறி தப்ப முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது ஊழியர்களை ஏற்றி செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இராணுவ விமானத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் ஏற முயற்சித்த போதே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்தோடு அமெரிக்க இராணுவம் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின்போது இந்த மரணங்கள் ஏற்பட்டதா? அல்லது நெரிசலில் சிக்கி அவர்கள் பலியானார்களா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் உட்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக தலைநகர் காபூல் விமான நிலையத்தில் கூட்டம் கூட்டமாக நிற்கின்றனர்.