கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம் - இராணுவம் உதவிக்கு அழைப்பு
பொலன்னறுவை கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் பாரிய மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் இதுவரையில் 5 கைதிகள் காயமடைந்துள்ளனர். அங்கு பதற்றமான சூழல் தொடர்கிறது.
கைதிகள் தப்பியோட்டம்
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய கைதிகளைக் கண்டறிய உடனடியாக தேடுதல் குழு அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருபவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் மண்டையில் தாக்கியதையடுத்து இரு குழுவாக சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்று நிலமையை கண்காணித்த வெலிகந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இதன்போது ஏற்பட்ட தாக்குதலின் போது பொலிஸ் பொறுப்பதிகாரி, இரு பொலிசார் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் போது தப்பி ஓடிய கைதிகளை தேடியவரும் நிலையில் இன்று காலை வரையில் தப்பிஓடிய 35 கைதிகள் சரணடைந்ததுடன் ஏனைவர்களை தேடி
இராணுவத்தினரும் பொலிசாரும் மதுறு ஓயா காட்டுப்பகுதியில் தேடுதல்களை நடாத்தி வருகின்றனர்.