விபத்தில் பலியான பிக்குகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல்
நா உயன ஆரண்ய சேனாசனத்தில் ஏற்பட்ட விபத்தில் மறைந்த அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பௌத்த பிக்குகளுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பௌத்த பிக்குகள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர வனத்தில் வளர்ந்த பௌத்த பிக்குகள், புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கி நம்மை விட்டு பிரிந்து சென்றதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.