அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம்!
கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் நிலவுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் மற்றும் பாரஊர்திகளை அகற்றுவதற்கு கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று முயற்சித்தபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்களில் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதை அடுத்தே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகையை ஆர்ப்பாட்டக்காரர் வைக்க முயற்சித்த போதே, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, அலரி மாளிகைக்கு முன்பாக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலிஸார் அகற்ற முற்பட்டவேளையிலேயே இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது நடத்தப்பட்ட தாக்குதலினால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை காலி முகதிடலில் கோ ஹோம் கோட்டா , போல அலரிமாளைகை முன்பாகவுள்ள போராட்டக்காரர்கள் அங்கு ‘மைனா கோ கம’ என பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


