இஷாரா செவ்வந்தி - நாமல் ராஜபக்ஷ காதல்; சி.ஐ.டிக்கு முறைப்பாடு!
கணேமுல்ல சஞ்சீவ கொலை சந்தேக நபர் இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் பரவும் போலி பதிவுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பெரமுன கட்சி எம்.பி பசன் கஸ்தூரி பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பசன் கஸ்தூரி பெர்னாண்டோ இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்களில் போலி பதிவுகள்
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயரை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இஷாரா செவ்வந்தி குறித்த பல கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி வுருகின்றன.
இதன் மத்தியில் கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பயன்படுத்திய தேர்தல் சுவரொட்டிகளில் இஷாரா செவ்வந்தியின் படத்தை பயன்படுத்தி இஷாரா செவ்வந்திக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் தொடர்பிருப்பதாக சமூக ஊடகங்களில் போலி பதிவுகள் பரவி வருகின்றன.
குற்றச் செயல்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.
எனவே இவ்வாறான போலி தகவல்களை பரப்பும் சமூக ஊடக கணக்குகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன அடிப்படையில் சி.ஐ.டியில் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.