கடைக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி; மயிரிழையில் தப்பிய பெண்
மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் தொழில்நுட்ப சாதனக் கடையொன்றிற்குள் திடீரென முச்சக்கரவண்டி ஒன்று பாய்ந்து விபத்திற்குள்ளான நிலையில் பெண் ஒருவர் தெய்வாதீமனாக உயிர் தப்பியுள்ளார்.
வித்து ஏற்பட்ட கடையில் பெண்ணொருவர் பிறின்ட் எடுப்பதற்காக சென்ற நிலையில் அங்கு ஊழியர் பிறின்ட் எடுத்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென முச்சக்கரவண்டி கடைக்குள் வேகமாகப் புகுந்துள்ளது.
கட்டுப்பாட்டையிழந்த முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்த வேளையில் அங்கு பெண் நின்று கொண்டிருந்தார். எனினும் ஒரு நொடிப்பொழுதில் அவர் உயிர்தப்பியுள்ளார்.
முச்சக்கரவண்டி கடைக்குள் பாய்ந்ததில் கடையில் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதுடன் பல லட்சம் பெறுமதியான பொருட்களும் சேதமடைந்துள்ளது.