யாழ் நெடுந்தீவில் ஒன்று கூடிய மக்களால் பதற்றம்!
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இன்று அதிகாலை 6 பேர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட சம்பவம் தமிழர் பகுதிகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் போராட்டம்
இந்நிலையில் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் மேற்கொண்டு உடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய வேளை போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த 100 வயது மூதாட்டி யாழ் ப்[ஓதனா வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
1)யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; ஐவர் சடலங்களாக மீட்பு
2 யாழ்ப்பாணத்தை அதிர வைத்த கொலைச்சம்பவம்;
3) யாழை உலுக்கிய சம்பவம்; மறு அறிவித்தல் வரை படகுச்சேவை நிறுத்தம்!
4) யாழ் நெடுந்தீவு படுகொலை; அமைச்சர் டக்லஸ் அதிரடி!
5) யாழ்.நெடுந்தீவு படுகொலை சம்பவம்; காயமடைந்த பெண் தொடர்பில் வெளியான தகவல்
6) யாழ் நெடுந்தீவில் ஒன்று கூடிய மக்களால் பதற்றம்!




