யாழில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; ஐவர் சடலங்களாக மீட்பு

Yadu
Report this article
யாழ் நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இடம் பெற்ற கோரச் சம்பவம்
இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 பெண்கள், 2 ஆண்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று முற்பகல் 11 மணிவரை வீட்டிலிருந்து யாரும் வெளியில் வராத நிலையில் உள்ளே சென்று பார்த்த போது நால்வர் சடலமாகக் காணப்பட்டனர்.
ஒருவர் குற்றுயிராகவும் மற்றொருவர் அறை ஒன்றினுள் சடலமாகவும் மீட்கப்பட்டார். விசாரணைகளின் பின்னரே சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிக பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நெடுத்தீவுக்குச் சென்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
1) யாழ்ப்பாணத்தை அதிர வைத்த கொலைச்சம்பவம்;
2) மறு அறிவித்தல் வரை படகுச்சேவை நிறுத்தம்!