களனியில் பதற்றம்... பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டு தாக்குதல்
களனியில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்காகப் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (04-10-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்கக் கோரியும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
களனி – டலுகம பிரதேசத்தில் இடம்பெற்றா ஆர்ப்பாட்டப் பேரணியின் போது பொலிஸாரின் தடையை மீறிச் செல்ல முற்பட்ட போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.