வரி செலுத்துவோரிற்கான விசேட அறிவிப்பு
வரி செலுத்துவோரிற்கான விசேட அறிவிப்பு ஒன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி 2024 /2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை, செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் ஒன்-லைன் வரி செலுத்தும் முறையினூடாக செலுத்தலாம் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்த தாமதித்தால் அல்லது தவறவிட்டால் வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும், நேரடி கட்டணச் சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் வரி செலுத்தாமை அல்லது தாமதமாக பணம் செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதங்கள் மற்றும் வட்டி ஒருபோதும் தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.