யாழில் ஆசிரியர்கள் கொட்டும் மழையில் போராட்டம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் (13) முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வடமாகாண கல்வி திணைக்களம் மேற்கொண்ட சேவையின் தேவை கருதிய இடமாற்றம் பாரபட்சமானதும் முறையற்ற இடமாற்றமாக கருதுகிறோம்.
சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக தீவகம் மற்றும் கஷ்டப் பிரதேசங்களில் கடமை ஆற்றிய ஆசிரியர்களை மீண்டும் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடமை ஆற்றும் பலர் இன்று வரை வெளி மாவட்டம் செல்லாத நிலையில் அவர்களை வெளிமாவட்டங்களுக்கு அனுப்பாமல் அரசியல் செல்வாக்கு காரணமாக யாழ்ப்பாணத்தில் தங்க வைத்துள்ளார்கள்.
வட மாகாண கல்வி அமைச்சர் ஆளுநர் செயலகமும் அரசியல் அடிமைகளாகியுள்ள நிலையில் இந்த இடமாற்றத்தை ஏற்க மாட்டோம். தமக்கு நீதியான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.