பிரித்தானிய இளவரசர் மகனுக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியரின் மோசமான செயல்!
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மீது, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய இந்திய இளைஞர்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும் பிரித்தானியாவை சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்ற ஆசிரியர், இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் படி கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ் விவகாரம் தொடர்பில் மேத்யூ கடந்த நவம்பர் மாதம் 2022 இல் தேசிய குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில், 120,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் படங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் உள்ள ஒருவருக்கு £65,398 பவுண்டுகளை கொடுத்து குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் படி கேட்டுக்கொண்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேத்யூ தனது ஆரம்பக் குற்றங்களை ஒப்புக்கொண்டாலும், அவர் மீது 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.