காதலை ஏற்க மறுத்த இளம் ஆசிரியைக்கு நேர்ந்த கதி ; தீவிரமாகும் விசாரணை
களுத்துறை, நாகொடை பகுதியில் ஆசிரியர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமைக்காக கைப்பேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று தொடர்பல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த இளம் ஆசிரியை ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை
குறித்த ஆசிரியை சந்தேகநபரின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் குறித்த சந்தேக நபர் கைப்பேசியை பறித்துவிட்டு தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஆசிரியையின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை கைது செய்ய மதுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.