யாழ்ப்பாணத்தில் பாடசாலை ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!
யாழ்ப்பாண பகுதியில் உள்ள பாடசாலையில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இச் சம்பவத்தில் யாழ். பலாலி வடக்கு அ.த.க பாடசாலையின் ஆசிரியையாக பணிபுரியும் கலைவாணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியை பாடசாலைக்கு எப்போதும் முதல் ஆளாக வந்துவிடுவார் பிள்ளைகளை வழி நடத்தி வருவதுடன், பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் என்றும் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர் எனவும் பாடசாலை சமூகம் அவரை நினைவு கூர்ந்துள்ளது.
மேலும், ஆசிரியைக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில் , அதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.