மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்
பாடசாலை மாணவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று (31) உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆபாசப் படங்களுக்கு அடிமை
ஆபாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உடலுறவில் இருந்த தருணங்களை இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், குடும்ப தகராறில் மனைவியிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முறைப்பாடு அளித்த ஆசிரியையான மனைவிக்கும் அவரது கணவருக்கும் இடையில் அண்மையில் தகராறினால் ஆபாசப் படங்களை பகிர்ந்து சந்தேகநபர் பழிவாங்க எண்ணியமை நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மனச்சோர்வு எனப்படும் உளவியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது . இது ஆபாசப் படங்களுக்கு அதிகமாக அடிமையாகியிருப்பதால் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இட்ய்ஹனையடுத்து அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.