இலங்கை சிறையில் 817 மரண தண்டனை கைதிகள்
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும்.

இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர். மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தந்தை என அழைக்காததால் தாயின் காதலன் தாக்குதல்; மூன்று வயது சிறுமி மரணத்தில் வெளிவரும் அதிர்ச்சிப் பின்னனி
அறிக்கையில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர். இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.