விசேட தேவையுடைய மாணவனை தாக்கிய ஆசிரியர்; பெற்றோர் முறைப்பாடு
மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள 'சுபாக்யா' விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னிலைல் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய டி.எம். சஹான் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த பாடசாலையில் தங்கி பயின்று வந்த இந்த மாணவன், தாக்குதலுக்கு உள்ளானதை தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், தற்போது வீடு திரும்பியுள்ளார். சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.