ஹீரோவாக களமிறங்கும் முதலமைச்சர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்; வெளியான தகவல்
தமிழகத்தின் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருப்பார் ஜேசன் சஞ்சய் . அப்ப பெரிய நடிகராக இருந்ததால் எப்படியும் பின்னாளில் ஜேசன் சஞ்சய் நடிகராக வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், அவரோ இயக்குனராக களமிறங்கி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை வைத்து சிக்மா என்கிற படத்தை இயக்கினார் ஜேசன் சஞ்சய்.
அவருக்கு நடிப்பில் ஆரமில்லை என சொல்லப்பட்டாலும் சிக்மா படத்தின் புரமோஷன் பாடலில் பர்பாமன்ஸும் செய்திருந்தார் ஜேசன். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியாகும் எனத்தெரிகிறது.
இந்நிலையில்தான், எல்லோரும் எதிர்பார்த்தபடி ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.