குளிர்சாதன பெட்டியில் உருவான சிவலிங்கம்; பார்க்க படையெடுக்கும் மக்கள்
இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில், குளிர்சாதன பெட்டியின் (ஃப்ரிட்ஜ்) உள்ளே பனிக்கட்டி இயற்கையாகவே சிவலிங்கம் போல் உருவானது.
அமர்நாத் பனி லிங்கத்தை போன்றே காட்சியளிக்கும் இந்த அதிசயத்தைக் காண அப்பகுதி மக்கள் திரண்டு, மந்திரங்களை முழங்கி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

ஏராளமான மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு
இந்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மக்கள் அந்த வீட்டிற்குச் சென்று பனிக்கட்டிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
குளிர்சாதன பெட்டிக்குள் தோன்றிய இந்த பனி வடிவம் சிவபெருமானின் அருள் என்று கருதி அப்பகுதி மக்கள் 'ஹர ஹர மகாதேவ்' என்று முழக்கமிட்டு சிறப்பு வழிபாடுகளைச் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன.