இவ்வளவு வரியா? இலங்கையில் கைபேசி பாவனையாளர்களுக்கு க்ஷாக் தகவல்!
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள், இணைய சேவைக்காக 20.3% வரியையும், சாதாரண குரல் அழைப்புகளுக்காக (Voice Calls) 38% வரியையும் செலுத்த கடமைப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கூறிள்ளது.
கடந்த (17) ஆம் திகதி இடம்பெற்ற அரச நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள் கலந்துகொண்டபோது இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கையடக்கத் தொலைபேசி நுகர்வோருக்கு வரி
கூட்டத்தின்போது, முன் பணம் செலுத்தும் (Prepaid) கையடக்கத் தொலைபேசி சேவைகளைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு வரி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வினவியபோது அததற்குப் பதிலளித்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள்,
தொலைத்தொடர்பு சுமைகளின் கட்டமைப்பை விளக்கினர். தற்போது தொலைபேசி சேவைப் பாவனையாளர்களுக்கு SES, TL, மற்றும் VAT ஆகிய வரிகள் நடைமுறையில் உள்ளன.

இணையப் பயன்பாட்டிற்கு தொலைத்தொடர்பு வரி (Telecommunication Levy) விதிக்கப்படவில்லை. இருப்பினும், நுகர்வோர் தரவுகளுக்கு சுமார் 20.3% வரியைச் செலுத்துகின்றனர்.
குரல் சேவைகளுக்காக 38.4% வீத வரி
எனினும் குரல் சேவைகளுக்காக 38.4% வீதத்தில் வரி விதிக்கப்படுகிறது என்று அதிகாரிகள் விளக்கினர். 100 Recharge செய்யும் ஒரு கையடக்க தொலைபேசிப் பாவனையாளரால், குரல் அழைப்புகளுக்காக 61.60 பெறுமதியான அழைப்புகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
நுகர்வோர் இறுதியில் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள தொகை அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டு முறையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் வருமானம் ரூ45 பில்லியன் ஆகும் என்று அதன் தலைவர் குழுவிடம் தெரிவித்தார்.
இதில் ரூ18.2 பில்லியன் வருமான வரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை அடுத்த ஆண்டிற்கான தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் எதிர்பார்க்கப்படும் வருமானம் ரூபாய் 50 பில்லியன் ஆகும் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.