22ஆம் திகதிக்குப் பின் வானிலையில் பாரிய மாற்றம்
இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை
இதனால் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல், தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலையில் பனி மூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.