ஏர் இந்தியாவை மீண்டும் கைப்பற்றிய டாடா நிறுவனம்! மகிழ்ச்சியில் ரத்தன் டாடா
ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்ததை 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்திய அரசாங்கம் ஏர் இந்தியா நிறுவனத்தை கடும் இழப்பை சந்தித்து வந்தது. ஏர் இந்தியா நிறுவனம் சுமார் 70,000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்பட்டது. இந்த கடும் இழப்பால் ஏர் இந்தியாவை விற்க கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய அரசு நடவடிக்கை முன்னெடுத்து வந்தது.
மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்ய கடந்த ஏப்ரல் மாதம் தீவிரமாக செயல்பட்டு வந்தது.
Welcome back, Air India ?? pic.twitter.com/euIREDIzkV
— Ratan N. Tata (@RNTata2000) October 8, 2021
மேலும் ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களைச் சமர்ப்பிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 15-ம் தேதியை மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் இடம் விற்பனை செய்ய அமைச்சர்கள் குழுவும் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் டீவிட்டரில் ரத்தன் டாடா மகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு,
டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவது மகிழ்ச்சியாகவுள்ளது, மீண்டும் ஏர் இந்தியாவை கட்டமைக்க நிறைய உழைப்புகள் தேவை. டாடா குமுமத்துக்கு ஏர் இந்தியா பலமான வாய்ப்புகளைப் பெற்றுத்தரும்.
மேலும் ஒரு காலத்தில் ஜே.ஆர்.டி டாடா தலைமையில் ஏர் இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக திகழ்ந்தது. மீண்டும் இந்த பெயரை பெறுவதற்கான வாய்ப்பு டாடாவுக்கு கிடைத்துள்ளது மிகிழ்ச்சியளிக்கின்றது,