சுக்கிர தோஷம் விலக 1 டம்ளர் தண்ணீர் போதுமானது
பணம் சேர வேண்டும் என்றால் அந்த சுக்கிர பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும்.
சுக்கிர யோகம் பெற செய்ய வேண்டிய தண்ணீர் பரிகாரம்
அந்த காலத்தில் குடும்ப தலைவிகள் இரவு தூங்கு செல்வதற்கு முன்பு ஒரு சொம்பு நிறைய தண்ணீரும், அந்த தண்ணீரை குடிப்பதற்கு ஒரு டம்ளரையும் அதன் மேலே வைத்து எடுத்து படுக்கின்ற அறைக்கு செல்வார்கள்.
படுக்கையறை என்பது ஜோதிடத்தில் பன்னிரண்டாம் பாகமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சுக்கிர பகவான் நீச்சமாகி இருந்தால்தான், பணக்கஷ்டம் வரும்.
அதை சரி செய்ய அந்த இடத்தில் சந்திரனுக்கு உரிய நீரைக் கொண்டு போய் வைத்தால் அந்த தோஷம் விலகி விடும்.
சுக்கிர தோஷத்தை விளக்கக்கூடிய வேலையை இந்த சொம்பு தண்ணீர் செய்து விடும்.
மறுநாள் காலை எழுந்தவுடன் இந்த சொம்பில் மீதம் இருக்கும் தண்ணீரை வீட்டிற்கு வெளியே இருக்கும் துளசி செடி, தொட்டாசினிங்கி செடி, மருதாணி செடிக்கு ஊற்றி வர பணக்கஷ்டம் தீரும். சுக்கிர யோகம் அடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பரிகாரம்
வீட்டுக்கு வெளியே செடிகள் இல்லை என்றாலும் ஒரு சின்ன தொட்டியில் செடியை வாங்கி வையுங்கள்.
துளசி செடியில் கூட இந்த தண்ணீரை ஊற்றலாம். அந்த சொம்பு தண்ணீரை நாம் எச்சில் செய்து குடிக்க போவது கிடையாது.
டம்ளரில் ஊற்றித்தான் குடிக்க போகின்றோம். மீதம் இருக்கும் தண்ணீரை சுக்கிர பகவானை நினைத்து செடி கொடிகளுக்கு ஊற்றி வர சுக்கிர தோஷம் விலகும்.
மொச்சை கொட்டை
அதேபோல வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் வெள்ளை நிறத்தில் இருக்கும் மொச்சை கொட்டையை வீட்டிற்கு வாங்கி வந்தாலும் சுக்கிர யோகம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மொச்சைக்கொட்டை வாங்குபவர்கள் வீட்டில் நிச்சயம் பணக்கஷ்டம் வராது. இந்த ஆன்மீகம் பரிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள்.
நிச்சயமாக சுக்கிர பகவானின் அருளாசியை பெற்று பணக்காரராகும் யோகத்தை பெறுவீர்கள்.