தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க பச்சை கொடி காட்டிய மு.க ஸ்டாலின்
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க திராவிட முன்னேற்றக் கழகம் எந்த வகையிலும் இடையூறாக அமையாது என அந்த கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பார்க்கும்
அத்துடன் அரசியலமைப்பு நெருக்கடி அல்லது மற்றுமொரு தேர்தலை திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததால் பதவியேற்பு தள்ளிப்போகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் தராமல் தொடர்ந்து கவனிப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், திமுக ஆறு மாதங்களுக்கு எவ்வித இடையூறும் இன்றிப் பார்க்கும் எனக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், விஜய் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டங்களை தவெக அரசு தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.