இலங்கைக்கு கடத்தவுள்ள கஞ்சாவை மடக்கிப்பிடித்த தமிழகப் பொலிசார்!
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 56 கிலோ கஞ்சா நேற்று தமிழகப் பொலிசாரிடம் சிக்கியுள்ளது.
இந்த நிலையில்,தமிழகம் தம்பிக்கோட்டை மறவக்காட்டில் உள்ள பற்றையில் மறைத்து வைத்திருந்த சமயமே மேற்படி கஞ்சாவை தமிழகப் பொலிசார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.
குறிப்பாக, அதிராம்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கடற்கரை காவல் நிலையத்தினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இரண்டு பச்சை நிற பொலித்தீன் கவர்களில் 28 பொதிகள் காணப்பட்டன.
காணப்பட்ட பொதிகள் ஒவ்வொன்றும் 2 கிலோ எடை கொண்டவை அதன் அடிப்படையில் சுமார் 56 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய பொலிஸார் அவற்றை பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.