விபத்தில் சிக்கிய நடிகை தேவி பிரியா; சாரதி உயிரிழப்பு
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவி பிரியா. களத்து வீடு, சந்திரலேகா, செல்லமே, மாப்பிள்ளை, சக்தி, விக்ரமாதித்யன், அத்திப்பூக்கள் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை தேவி பிரியா வெள்ளித்திரை நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார் . பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி NH இல் பஞ்சராகி நின்ற நடிகை தேவி பிரியாவின் காரின் மீது மற்றொரு வாகனம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

காரின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து
டயரை மாற்றி கொண்டிருக்கும்போது பின்னால் வந்து மோதியதில், காரின் ட்ரைவர் முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
நடிகை தேவி பிரியா காயமின்றி உயிர் தப்பிய நிலையில், அவரது உதவியாளர் திவாகர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.