மட்டக்களப்பில் வாக்களித்தார் தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மட்டக்கள்ப்பில் தனது வாக்கினை அளித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பிளாந்துறை முத்துலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மட்டு. அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் தமது வாக்கினைப் பதிவு செய்தார்.
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் (21) நடைபெற்று வருகிறது.
நாட்டின் தலைவரைத் தெரிவு செய்வதற்காக காலை 7 மணி முதல் தமது வாக்குகளை மக்கள் பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மக்கள் அமைதியான முறையில் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றியிருந்தனர்.