தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் தமிழ் வீரர்; ஆனால் இலங்கையில் !
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் செனுரான் முத்துசாமி (Senuran Muthusamy) என்ற தமிழ் வீரர் மீண்டும் விளையாடுகிறார்.
2019 ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர், சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த போட்டி இவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ் வீரர் இல்லை
Batting, Bowling என சகலதுறை (All Rounder) ஆக வலம் வரும் செனுரான் முத்துசாமி டர்பனில் பிறந்தவர் (வயது 30).
அதேவேளை இலங்கையில் கனிசமான அளவு தமிழ் மக்கள் இருந்தும் ஒரு தமிழ் வீரர் இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த 15 ஆண்டுகளாக இல்லை.
ஆனால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியில் திறமைக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதால் இனமத பேதமின்றி வீரர்கள் தேர்வு செய்கிறார்கள் (அம்லா, தாஹிர், ஷம்சி போன்ற முஸ்லீம் வீரர்களும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் விளையாடினார்கள்).