மமதையோடு செயற்பட்டால் பாடம் புகட்டவேண்டி வரும்; ஸ்ரீதரன் எம்.பி
தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று கூற முடியாது எனவும் அவர் கூறினார்.
தேசிய மக்கள் சக்திக்கு சற்று வாக்கு குறைந்துள்ளதே தவிர, அவர்களுக்கான ஆதரவு தற்போதும் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் உள்ள தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களைப் பெற்றதன் பின்னர் தற்போது செல்வாக்கு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் என கூறிய ஸ்ரீதரன் எம்.பி , தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.