மக்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல்; வாகனங்கள் வீடுகள் சேதம்
இந்தியாவின் ஜம்மு நகரில் இன்று காலை பாக்கிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் வீடுகளிற்கும் வாகனங்களிற்கும் சேதமேற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு நகரின் ரெஹடி காலனியில் வீடுகளும் வாகனமும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாக்கிஸ்தான் அப்பாவி மக்களை இலக்குவைக்கின்றது
அதேவேளை ஜம்முவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டமை இதுவே முதல்தடவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்தங்கள் கேட்டன பின்னர் புகைமண்டலம் எழுந்தது என அந்த பகுதியை சேர்ந்த ரகேஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது ஏன் பாக்கிஸ்தான் அப்பாவி பொதுமக்களை இலக்குவைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.