நாளை இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ் பேசும் கட்சிகளும் ஆதரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஆதரவை வெளியிட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பனவே தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.
வன்முறைகளின்றி, அறவழியில் போராட வேண்டும் எனவும் மேற்படி கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேவேளை காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் நாளை 9 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு பல தரப்பினரும் ஆதரவை வெளியிட்டுள்ளன.