புத்தாண்டு தினத்தன்று மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிய திருகோணமலை மக்கள்!
தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14-04-2022) நண்பகல்முதல் திருகோணமலை நகரில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாமையினால் நிலையங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
இந்நிலையில் எரிபொருள் நிரப்ப வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நாட்டில் புது வருடத்தை முன்னிட்டு கூட எரிபொருளுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
புது வருடத்திலாவது வெளியில் பயணங்களை மேற் கொள்வது கூட இவ் எரிபொருள் பற்றாக்குறை பிரதான காரணமாக உள்ளதாகவும் மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம் பெற்றாலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் இருந்தே பெற வேண்டியதொரு நிலைக்கு தள்ளப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.