அவசர கலந்துரையாடலை நடத்திய தமிழரசுக் கட்சி
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டம் இன்று வவுனியாவில் கூடியது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் அரசியல் குழுக் கூட்டம் மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.
மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சி. ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் கலாநிதி ப.சத்தியலிங்கம், துரைராசசிங்கம் ஆகியோருடன் அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.