பொலிஸாருடன் வாக்குவாதம் செய்த பெண்ணுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
ரன்மல் கொடிதுவக்குவின் சகோதரி என கூறி போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
கம்பஹாவில் உடுகம்பொல சந்தைக்கு அருகில் கடந்த சனிக்கிழமை (01) போக்குவரத்து விதிமுறைகளை மீறிய கார் ஒன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்த முயன்றுள்ளனர்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் சகோதரி
இதன்போது காரில் இருந்த பெண் ஒருவர் தான் ஒரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான ரன்மல் கொடிதுவக்குவின் சகோதரி என கூறி பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதோடு பொலிஸ் உத்தரவைம் மீறி காரை செலுத்திச் சென்றதையடுத்து மினுவாங்கொடை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை சந்தேக நபரான பெண் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரான ரன்மல் கொடிதுவக்குவின் சகோதரி இல்லை எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.