தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் ; இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!
புதுச்சேரியில் விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் மக்கள் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் மற்றும் பள்ளி படிப்புகளில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து பரிசுகள் வழகி இருந்தார் நடிகர் விஜய்.
நடிகர் விஜயின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவுகளை தெரிவித்துவருகின்றனர்.
ஆளப்பிறந்தவர் தளபதி
இந்த சூழ்நிலையில் புதுச்சேரி விஜய் ரசிகர் மன்றத்தினர் புதிய பேருந்து நிலையம் மறைமலை அடிகள் சாலையில் ஒரு பேனர் வைத்துள்ளனர்.
அந்த பேனரில் தமிழ்நாடு சட்டமன்றம் பின்னால் இருப்பது போன்றும் அதற்கு முன்னே டேபிள் முன் நின்று கொண்டு நடிகர் விஜய் பேசுவது போன்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
டேபிள் முன் பக்கம் ச.ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சர் என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் 2026 -ல் தமிழக சட்டமன்றத்தில் உங்கள் குரல் மக்களின் உரிமை குரல் என்றும், ஆளப்பிறந்தவர் தளபதி என்ற வாசகங்கள் பேனரில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் இன் இந்த பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது.