அவுஸ்திரேலியாவில் பரபரப்பு சம்பவம்: சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்பம்!
அவுஸ்திரேலிய பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவம் அவுஸ்திரேலியா - கான்பெராவின் வடபகுதியில் இடம்பெற்றுள்ளது.
யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.
அதேவேளை, குளத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டடிருந்த வாகனமொன்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.
இதில் உயிரிழந்த மூவருக்குமே தொடர்பு இருப்பதாக கருதுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழ் குடும்பம் உயிரிழந்தமை தொடர்பில் கொலையா? தற்கொலையா? என்ற அடிப்படையில் விசாரணை செய்து வருவதாக அவுஸ்திரேலிய பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, விசாரணைகள் குழப்பமானவையாக காணப்படுவதாலும் இன்னமும் பூர்த்தியடையாததாலும் உயிரிழப்புகளிற்கான காரணங்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையை மரணவிசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.