ஷிரந்தி ராஜபக்சவுக்கு பல நூறுகோடியில் சொத்துக்கள் ? CIDக்கு சென்ற முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

பொய்களின் அரசாங்கம்..
தேர்தலுக்கு முன்னர் ஷிரந்தி ராஜபக்சவின் ஆபரணங்கள் பற்றிப் பேசியவர்கள், இன்றும் அதே வெறுப்பு அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர்.
450 கோடி பெறுமதியான வீடுகள், 93,000 கோடி சொத்துக்கள் என இமாலயப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்ற முற்படும் இந்த அரசாங்கம், ஒரு பொய்களின் அரசாங்கம்' என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
ராஜபக்ச குடும்பத்தினருக்குச் சொந்தமாக ஒரு சட்டவிரோதக் கட்டடம் இருந்தால் கூட, இந்த அரசாங்கம் ஒன்றரை வருடங்கள் சும்மா இருக்காது என்பதை மக்கள் அறிவார்கள்.
கடந்த காலங்களில் கூறப்பட்ட லம்போகினி கார்கள், தங்க சங்கிலிகள், ரொக்கெட்டுகள் என அனைத்துமே அப்பட்டமான பொய்கள் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
நாட்டுக்காக உண்மையாக உழைத்த தலைவர்கள் யார் என்பதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர், மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பு மீண்டும் மேலோங்கி வருவதைக் கண்டு அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும்.
ஏப்ரல் புத்தாண்டு மற்றும் மே தின நிகழ்வுகளில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு மக்கள் வழங்கிய வரவேற்பு இதனை உறுதிப்படுத்துகிறது. தமது தோல்விகளை மறைக்கவே மீண்டும் ஷிரந்தி ராஜபக்ச போன்றவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடத்துகின்றது. இவ்வாறான பொய்களுக்கு நீண்ட ஆயுள் கிடையாது என தெரிவித்தார்.