வீழ்ந்தது காபூல்; தலிபான்களின் அடுத்த திட்டம்; வெளியான தகவல்
காபூல் விமான நிலையத்தை கைப்பற்றிய தலிபான்கள், தற்போது பிரதமர் இல்லத்தையும் கைப்பற்றி பிரதமர் அலுவலகத்தில் உட்கார்ந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுமார் 1,000 தீவிரவாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தலிபான்களின் தலைவர், தான் அமெரிக்க குவான்டனமோ பே என்னும் சிறையில் 8 வருடங்கள் இருந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நன்றாக ஆங்கிலம் பேசவல்ல இந்த தலைவர் தற்போது சர்வதேச TVக்கு பேட்டிகளை வழங்கி வருகிறார்.
இதேவேளை கடைசியாக நாட்டை விட்டு வெளியேற இருந்த பல ஆப்கான் வாசிகள் தற்போது அங்கு
சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை தேடி கொல்ல தலிபான்கள் முயற்சி செய்து வருவதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.