எரிபொருள் நிலத்தடி குழாய் கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்கு துறையில் இருந்து கொலன்னாவை களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகிக்கும் நிலத்தடி குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்வதற்கு இரண்டு நாட்களுக்கும் அதிக நாட்கள் தேவைப்படும் என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையில் இருந்து கொலன்னாவை களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகிக்கும் இரண்டு நிலத்தடி குழாய்களில் ஒன்றில் நேற்றிரவு கசிவு ஏற்பட்டது.
முத்துராஜவெல முனையத்தில் தரையிறக்கப்பட்ட குறித்த குழாயினூடாக 14,000 மெற்றிக் டன் 92 ரக பெற்றோல் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றது.
இதன்காரணமாக 100 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் இலங்கை சுதந்திர தொழிற்சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன குறிப்பிட்டுள்ளார்.