கொரோனாவிலிருந்து மீளும் பெண்களுக்கு தென்படும் நீண்ட கால நோயின் அறிகுறிகள்
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின் அதிலிருந்து மீண்ட பெண்களுக்கு முதல் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை ஏற்படும் நீண்டகால நோயின் அறிகுறிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
மேலும் இந்த நோயின் அறிகுறிகளானது பெண்களை மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீண்ட கால நோயின் 9 அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதன்படி,
- இயல்பற்ற சுவாசம் 8 சதவீதம்
- மன அழுத்தம் 15 சதவீதம்
- அறிவாற்றல் கோளாறு 4 சதவீதம்
- தலைவலி 5 சதவீதம்
- மார்பு மற்றும் தொண்டை வலி 6 சதவீதம்
- வயிற்றில் ஏற்படும் நோய் 8 சதவீதம்
- பிற உபாதைகள் 7 சதவீதம்
- தசை வலி 5 சதவீதம்
- சோர்வு 5 சதவீதம்
ஆகியவை அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொரோனாவானது நவீன வாய்த்தியத்திற்கு கடும் சவாலாக விளங்கி வருவதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.