கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சிறுவர்கள் வெளிப்படுத்தக்கூடிய அறிகுறிகள்
கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்கள் வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு அறிகுறிகள் குறித்து கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ஜி. விஜேசூரிய விளக்கியுள்ளார்.
சோர்வு, உதடுகள் மற்றும் கண்களில் நிற மாற்றம் மற்றும் தோலில் வீரியம் போன்ற தன்மை ஆகியவை சிறுவர்களின் உடலுக்குள் குறைந்தளவு ஒட்சிசனைக் குறிக்கலாம் என்று விளக்கிய அவர், பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை நெருக்கமான கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.
எனினும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்த அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றும் மருத்துவர் விஜேசூரிய குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், தங்கள் குழந்தைகளுக்கு விற்றமின் சி உள்ளிட்ட பல்வேறு மருந்துகளை அதிகமாக கொடுப்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இது இறுதியில் குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரின் சரியான வழிகாட்டுதல் இன்றி எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.