யாழில் வாள்வெட்டு ;இளைஞர் மூவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பகுதியில் கடந்த 3ஆம் திகதி இளைஞர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானதில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்திவந்த பொலிஸார் மூன்று இளைஞர்களை நேற்று (11) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள், மூன்று கஜேந்திரா வாள்கள் உட்பட ஏழு வாள்கள், இரண்டு அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, கைதான மூவரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.