யாழில் முகமூடி கும்பல் அரங்கேறிய கொடூரம்: அதி தீவிர சிகிச்சை பிரிவில் பேருந்து சாரதி!
யாழ் வடமராட்சி பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்றையதினம் அதிகாலை (10-01-2024) வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சாரதி மீதே வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அதிகாலை முகமூடி அணிந்து உந்துருளியில் வந்தவர்கள் குறித்த தனியார் பேருந்து சாரதி மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் படுகாயமடைந்த பேருந்து சாரதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.