வீதியில் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி! இருவரை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்

Shankar
Report this article
பொகவந்தலாவை பிரதேசத்தில் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணொருவரின் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோட திருடர் இருவரை பொதுமக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்கள், வீதியில் நடந்துச் சென்ற பெண்ணின் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதன்போது, சம்பவத்தை அறிந்த சிலர், ஒட்டோவில் திருடர்கள் தப்பியோடிய மோட்டார் சைக்கிளை தூரத்திச் சென்றுள்ளனர்.
திருடர்கள் இருவரும், பலாங்கொடை வீதிக்கு செல்வது எவ்வாறு என்று கேட்டறிந்த பின்னர், தவறுதலாக தோட்டத்திற்கு செல்லும் வீதிக்குள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதனால் பின்தொடர்ந்த பொதுமக்கள் திருடர்களைப் பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் பயன்படுத்தி மோட்டார் சைக்கிளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு, சந்தேக நபருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.