யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரி வாள்வெட்டுத் தாக்குதல்!
யாழ். பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்த 10 நிமிடத்தில் குழுவாக இறங்கி பருத்தித்துறை பகுதியில் வைத்து தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்த நீரியல் வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளஞ்குமரன் ஆகியோர் சம்பவம் தொடர்பில் அங்கியிருந்த மக்களிடம் கேட்டறிந்துள்ளார்.