யாழ்.சுன்னாகத்தில் குடும்பஸ்தர் மீது கொடூர வாள்வெட்டு தாக்குதல்!
யாழ்.சுன்னாகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இச்சம்பவம் இன்று (18) வியக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் – அம்பனை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரே இலக்காகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உறவுப்பகை காரணமாக, அயலில் உள்ளவரால் இந்த வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான 55 வயதுடைய குடும்பஸ்தர், தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர சம்பவத்தை அறங்கேற்றிய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தெல்லிப்பழை பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.