கொழும்பில் புத்தகக் கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்! இருவருக்கு நேர்ந்த நிலை
கொழும்பு - பன்னிபிட்டிய பகுதியில் உள்ள புத்தக விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவர் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (20-11-2023) மபுல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த புத்தக கடைக்கு வந்த சந்தேக நபர், கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளார். அப்போது, சம்பவத்தில் தலையிட முயன்ற மற்றொருவரும் தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
இதன்போது, அவரது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.