மருந்து வாங்கி தருகிறோம் தற்கொலை செய்துகொள்: தமிழ் இளைஞனை ஏமாற்றிய வேலைவாய்ப்பு எஜென்சி!
வவுனியாவில் உள்ள ஒரு தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எஜென்சி ஒன்று இளைஞர் ஒருவரை ருமேனியாவுக்கு அனுப்பவதாக கூறி பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் காணொளி ஒன்றின் மூலம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் காணொளி பதிவில் தெரிவித்த விடயம்,
ஜீவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எஜென்சி ஒன்றிற்கு 15-03-2023 திகதி சென்ற வவுனியா இளைஞன் கடவுச்சீட்டை கொடுத்தபோது, ருமேனியாவுக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.
பின்னர் 4 மாதத்தில் போராட்டம் முடித்துவிடும் என தெரிவித்ததாகவும், தற்போது 9 மாத காலமாகிவும் ஏமாத்தி கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட இளைஞன் கூறியுள்ளார்.
மேலும் குறித்த ஜீவன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு எஜென்சியிடம் 5 முறைக்கும் மேல் சென்று கொடுத்த கடவுச்சீட்டையும், பணத்தையும் கேட்டுள்ளார். இருப்பினும் தரமாட்டேன் என தெரிவித்துள்ளனர்.
பின்னர் பணம் தரவில்லையென்றால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். அதற்கு அந்த எஜென்சி தற்கொலை செய்து கொள்வதாக இருந்தால் செய்துகொள் தங்கள் மருந்து வாங்கி தருகிறோம் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட இளைஞன் கோரிக்கை விடுத்துள்ளார்.