எம்.பி சாணக்கியன் சகோதரனின் மதுபானசாலையில் இடம்பெற்ற சம்பவம்... மூவர் வைத்தியசாலையில்!
திருகோணமலையில் உள்ள மூதூர் இருதயபுர மதுபானசாலையில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்றைய தினம் (22.12.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் மூதூரைச் சேர்ந்த 3 நபர்கள் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைக்காக திருவண்ணாமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
தோப்பூரை சேர்ந்த பல குற்றவாளிகள் ஒன்றிணைந்து குறித்த மூவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்தியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், வாள்வெட்டு சம்பவம் அங்கியிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகிய நிலையில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மதுபானசாலை சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபான சாலை என்பது குறிப்பிடத்தக்கது.